Take a fresh look at your lifestyle.

அவசரமான வேண்டுகோள்!!! தொடரும் இனவழிப்பின் அடுத்த அத்தியாயம் தடுத்து நிறுத்துவது யார்?? -ஆதித்தன்

இலங்கைத்தீவினை தனிச்சிங்களத்தீவாக மாற்றுவதற்கான தமிழினவழிப்பின் கொடிய போர் 2009 இல் மௌனிக்கப்பட்டதே தவிர அது முடிவுக்கு வரவில்லை அடுத்த கட்ட இனவழிப்புக்கான நகர்வுகளை ஆயத்தங்களை அவர்கள் தமது எல்லைக்கு எட்டியவரைக்கும் முன்னெடுத்துக்கொண்டே இருக்கின்றனர் இன்று நந்திக்கடல் நந்தவனம்போலவும் முள்ளிவாய்காள் முல்லைவனம் போலவும் கிளிநொச்சி ஒரு அழகிய தலைநகரம்போலவும் காட்சியளிக்கின்றதே இங்கே தான் அந்த இனவழிப்பின் கோரத்தாண்டவங்கள் இடம்பெற்றது என்று யாராலும் நீரூபனம் செய்ய முடியுமா அதற்கான தடயங்கள் ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?? நிச்சயமாக இல்லை அபிவிருத்தி என்ற பெயரிலே ஒரு மாபெரும் இனவழிப்பின் அடையாளங்களை சட்சியங்களை எங்கள் அனுமதியோடு எங்கள் கண்முன்னே மூடி மறைத்துவிட்டார்கள் இது அவர்களின் கெட்டித்தனம் ஆனால் இன்று எங்கள் எதிர்கால சந்ததியினரும் புலம் பெயர் தேசத்தவரும் இணையத்தளங்களூடாகவே இந்த இனவிடுதலை போராட்ட வரலாற்றை போரின் அழிவுகளை அறிந்து கொள்கின்றனர் ஆனால் சிங்களபேரினவாதத்தின் அடுத்த இனவழிப்புக்கான அத்தியாயங்களுக்குள்ளே இந்த இணையவியல் தடய அழிப்புக்கள் அதாவது மிக முக்கியமான தரவுகள் எல்லாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன இது இவ்வாறு தொடருமாயின் எங்கள் அடுத்த சந்ததியினர் உன்மைகளை உணரமுடியாத அறியமுடியாத நிலையிலே உருவாகிவிடுவார்கள் இந்த இனவிடுதலைப்போராட்டத்தின் மதிப்பு மகத்துவம் அவசியம் என்ற எதுவுமே தெரியாத சாதாரணமான ஒரு சிறீலங்கா குடிமக்களாக இப்போது குறிப்பிடப்படுகின்ற இரண்டாம் தர குடிமக்களாகவே வாழவேண்டிய அல்லது தங்களை அடையாளப்படுத்தவேண்டிய நிலை உருவாகும் இதனை தடுத்து நிறுத்துவது யார்??? கட்சிகளாய் குழுக்களாய் சந்தி சந்தியாய் பிரிந்து நின்று மல்லுக்கட்டிக்கொண்டிருக்கும் அனைவரும் இதனை கவனத்தில் கொள்க?? இதுவும் ஒரு போர் சத்தமில்லாத போர் சர்வதேச ஊடகங்களுக்கு தேசியத்தலைவர் வழங்கிய செய்விகள் இப்போது இணையங்களிலிருந்து அழிக்கப்பட்டுள்ளது இதைவிட முக்கியமான அழிவுகள் தரவுகள் எல்லாம் நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது இதனை தடுத்து நிறுத்துவது எப்டி? இதனை அழிக்கமுடியாத ஆவணங்களாக பாதுகாப்பது எப்படி?

-ஆதித்தன்

பிற்குறிப்பு

tamilantube என்கின்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் இணைந்து youtubeக்கு நிகரான ஒரு காணொளித்தளம் ஒன்றை உருவாக்கியுள்ளனர் அதை நாம் அனைவரும் பாவனைக்குட்படுத்தி அவர்களின் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து எமது ஆவணங்களை பாதுகாப்போம்.

இணைப்பு: http://www.tamilantube.com