Take a fresh look at your lifestyle.

இரணைமடுவுக்கு மணித்தியாலத்திற்கு வரும் நீரின் அளவு தெரியுமா?: பணிப்பாளர் சுதாகரன் சொல்கிறார்

 

வடதமிழீழம், கிளிநொச்சி இரணைமடு குளத்திற்கு மணித்தியாலத்திற்கு 1340ஏக்கர் அடி நீர் வருகை தருவதாக கிளிநொச்சி யாழ்ப்பாணபிரதி நீர்பாசண பணிப்பாளர் என்.சுதாகரன் தெரிவிக்கின்றார்.

கிளிநொச்சியில் உள்ள குளங்களின் நீர்மட்டங்கள் தொடர்பில் இன்று அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 150 மில்லி மீட்டருக்கு அதிகம் பெய்த மழை காரணமாக குளங்களில் அதிகளவான நீர் வருகை தருவதாகவும், கனகராயன் குளம் உள்ளிட்ட குளங்கள் வான்பாய உள்ளமையால் அவற்றிலிருந்து வரும் நீர்களும் இரணைமடு குளத்திற்கு வருகை தந்து குளம் முழுமையடையும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடும் வரட்சி காரணமாக குளங்கள் வற்றி காணப்பட்ட நிலையில், இன்று நீர் வருகை விவசாயிகள் மத்தியிலும் மகிழச்சி ஊட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இரணைமடு குளத்திலிருந்து யாழ் குடிநீர் எடுத்து செல்வதற்கு எவ்வளவு நீர் தேவை என அவரிடம் வினவியபோது,
யாழ் மக்களின் குடிநீர் தெவையை நாம் மறந்து விடவில்லை. தற்போது காலபுாகம் 100 வீதமாகவும், சிறபோகம் 40 வீதமாகவும் காணப்பட்ட குளத்தின் நீர் முகாமைத்துவத்தில் அபிவிருத்தி ஊடாக சிறுபோகத்தை 60 வீதிமாக அதிகரித்துள்ளோம். அதேவேளை ஏனைய விவசாய தரைகள் தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தி உள்ளோம். யாழ் மக்களிற்கு குடிநீர் வழங்கும் திட்டம் தெர்லாந்து நாட்டின் உதவியுடன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. நீரைவீணாக கடலில் கலக்காதவாறு நாம் யாழ் மக்களிற்கான குடிநீர் திட்டத்தினை பெற்று தருவோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.