Take a fresh look at your lifestyle.

என்னை சீண்டாதீர்; பெரும்பான்மையை நிரூபிப்போம் என்கிறார் மைத்ரி

“நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நாங்கள் நிரூபிப்போம். இதனை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.. பல்வேறு வித்தைகளை காட்டி ஆட்சியை கைப்பற்ற நினைக்கிறார் ரணில். நான் அதற்கு கடைசி வரை இடமளிக்க மாட்டேன்” என ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சூளுரைத்தார்.

“என்னிடம் பல அஸ்திரங்கள் கைவசம் உள்ளன. அவற்றை பயன்படுத்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டுமானால் அதையும் செய்வேன். விளையாட வேண்டாம் என்று நான் சம்பந்தப்பட்டவர்களுக்கு சொல்ல விரும்புகிறேன்” என்றும் ஜனாதிபதி மைத்திரி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை பத்தரமுல்லை “அப்பே கம” வளாகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினர்கள் மொபைல் போன்களை உள்ளே கொண்டுவர வேண்டாமென அறிவுறுத்தப்பட்டதுடன், அங்கு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.