Take a fresh look at your lifestyle.

சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் பேருந்திற்கு வெடிகுண்டு வைத்து தகர்ப்பு.!

தண்டேவாடாவின் பாசிலி பகுதியில் மத்திய துணை ராணுவப்படையினரை ஏற்றி வந்த பேருந்தை  குறிவைத்து மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் கண்ணி வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்களில் மூவரும், ஒரு காவலரும்  உயிரிழந்தனர்.

இரண்டு  காவலர்கள்  காயம் அடைந்துள்ளனர் என காவல்துறையினர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சத்தீஷ்காரில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது.