Take a fresh look at your lifestyle.

பிணையம் வழங்க நிர்மலா தேவி மீண்டும் மனு.!

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேராசிரியை நிர்மலாவேி மனுதாக்கல் செய்துள்ளார். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி, தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து வெளியான ஆதாரங்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக காமராஜர் பல்கலைக் கழக உதவிப் பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே பிணையம்  வழங்க கோரி 3 பேரும் 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது கூட்டுச்சதி, பெண்களை தவறான பாதைக்கு அழைப்பது, மின்னணு சாதனங்கள் மூலம் பெண்களின் மனது புண்படும்படி நடந்து கொள்வது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு 3 பேரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு, குற்றப்பத்திரிகையில் அடிப்படை முகாந்திரம் இல்லை என்பதால், எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று 3 பேரும் இன்று விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெற உள்ளது.