Take a fresh look at your lifestyle.

96 வயதில் தேர்வெழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மூதாட்டி.!

இந்தியா ,கேரளா முதியோர் கல்வி திட்டத்தில் படித்து 96 வயதில் தேர்வெழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கார்த்தியாயினி என்ற மூதாட்டியின் ஆசையை கேரள அரசு நிறைவேற்றியுள்ளது.
100 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், வாசிப்பிற்கு 30 மதிப்பெண்களும், மலையாளத்தில் எழுதுவதற்கு 40 மதிப்பெண்களும், கணக்கு பாடத்திற்கு 30 மதிப்பெண்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வாழ்நாளில் முதல் தேர்வை எழுதிய கார்த்தியாயினி வாசிப்பு பகுதியில் 30/30 என முழுமதிப்பெண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், கணினி கற்றுக்கொள்ள விரும்புவதாக கார்த்தியாயினி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனையடுத்து, மூதாட்டி, கார்த்தியாயினி அம்மாவுக்கு கேரள கல்வித்துறை அமைச்சர் லேப்டாப்பை பரிசாக வழங்கினார்.