Take a fresh look at your lifestyle.

அரசியல் நெருக்கடிக்கு மத்தியிலும் ரிஷாத் தரப்பினரும் உம்ரா பயணம்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உட்பட கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் மற்றும் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர், உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றுள்ளனர்.

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான, கலாநிதி இஸ்மாயிலும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக மக்காவுக்குப் பயணமாகவுள்ளார்.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஏழு போர் நேற்று உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கக நேற்றைய தினம் பயணமானது தெரிந்ததே.