Take a fresh look at your lifestyle.

திருமாவளவன் யாழ். வருகின்றார்: கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்

வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் மரநடுகையும் மலர்க் கண்காட்சியும் நாளை சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்நிகழவில் பிரதம விருந்தினராக வடமாகாண முன்னாள் முதல்வர் நீதியரசர் சி. வீ. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் . திருமாவளவனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

நாளை சனிக்கிழமை ஆரம்பமாகும் மலர்க்கண்காட்சி தொடரந்து 17 ஆம் திகதி சனிக்கிழமை வரை தினமும் காலை 9 மணிமுதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் அறிவித்துள்ளார்