Take a fresh look at your lifestyle.

விசேட நீதிமன்றில் கோத்தபாய முன்னிலையாகினார்

ஶ்ரீலங்கா முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்று முன்னர் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். டீ.எ ராஜபக்ஸ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரச நிதி 90 மில்லியன் ரூபாவை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு விசாரணைக்காகவே கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது