Take a fresh look at your lifestyle.

ஜனவரி 5 ல் தேர்தல்; ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

ஶ்ரீலங்கா நாடாளுமன்றம் நேற்று நள்ளிரவு கலைக்கப்படுவதாகவும், 2019 ஜனவரி 05ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பான அரசிதழ் அறிவிப்பு நேற்றிரவு இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 70 (05) பிரிவின் கீழும், 33(02) -சி பிரிவின் கீழும், 62 (02) பிரிவின் கீழும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 ஆவது பிரிவின் கீழும், தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நாடாளுமன்றத்தை நள்ளிரடன் கலைப்பதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம், 2019 ஜனவரி 17ஆம் திகதி கூடும் எனவும், 2019 ஜனவரி 05ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அரசிதழ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. வரும் நொவம்பர் 19ஆம் திகதி தொடக்கம், நொவம்பர் 26ஆம் திகதி நண்பகல் வரை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.