Take a fresh look at your lifestyle.

ஜோர்டானில் வரலாறு காணாத கனமழை.!

ஜோர்டான் நாட்டில் கொட்டித்தீர்த்த கனமழையில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர், 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். ஜோர்டானில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாகியுள்ளன. இடைவிடாது பெய்த மழையால் அந்நாட்டின் தாபா பகுதி கடுமையாக சதேமடைந்துள்ளது. பழம்பெரும் புராதான நகரான பெட்ராவில் 13 அடி உயரத்திற்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.

தொடர்ந்து மழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புராதான நகரான பெட்ராவுக்கு சுற்றுலா சென்ற 4000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் குவைத்தில் பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் ஸ்தம்பித்து போயுள்ளன. பேய் மழையால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். நகரின் பெரும்பாலான பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை மீட்க ராணுவமும் தேசிய பாதுகாப்பு படையினரும் களமிறங்கியுள்ளனர்.