Take a fresh look at your lifestyle.

பாராளமன்றம் கலைப்பு உயர்நீதிமன்றம் செல்லவுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தைக் கலைத்த நடவடிக்கை சட்ட முரணானது எனவும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் பதவிக் காலம் நான்கரை வருடங்களை அடையும் வரை அதனைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அவருக்கு அவ்வாறு செய்ய முடியாது என்பதை 19ஆம் திருத்தச் சட்டத்தின் மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது இவ்வாறிருக்கையில், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்ததை உயர் நீதிமன்றம் ஒரு போதும் அனுமதிக்காது. இருப்பினும், ஒரு விடயம் உள்ளது. அதாவது, இது தொடர்பில் உயர் நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பிக்க சிறிது கால தாமதம் எடுக்கும்.

ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை ஒரு சவாலாக எடுக்க தாம் தயார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.