Take a fresh look at your lifestyle.

வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!

 

வடதமிழீழம், வவுனியாவில் தேக்கவத்தைப்பகுதியில் இன்று மாலை 3மணியளவில் ஒருவரை ஹெரோயின் தூள் தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தவரை கைது செய்துள்ளதாக வவுனியா  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று மாலை தேக்கவத்தைப்பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கையின்போது ஹெரோயின் தூள் தமது உடமையில் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தார் என்ற சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து 520மில்லிக்கிராம் ஹெரோயின் தூள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

35வயதுடைய சத்தியவான் போல்ராஜ் பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவரையே கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.