Take a fresh look at your lifestyle.

அனர்த்தம் ஏற்படின் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கு தயார்-அரசாங்க அதிபர்!

வடக்கு கிழக்கு பருவபெயர்ச்சி மழை தொடர்பிலான முன்னாயத்த கூட்டம் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றகலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்து நிலையத்தினர்,பிரதேச செயலாளர்கள்,முப்படையினர் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.
இந்தகலந்துரையாடல் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் காலநிலை வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் என்னவிதமான தேவைகள் ஏற்படும் என்பது பற்றி அதனை எவ்விதமாக நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஏற்றவகையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையில் நிவாரண உதவிகள் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கான சமைத்த உணவுகள்  உலர் உணவுபோன்றவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினாலும், அனர்த்த நிவாரணசேவைகள் நிலையத்தினாலும் வழங்கப்படுகின்ற அதேவேளையில் ஏனைய பொருட்களை வழங்குவதற்கான ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு சிறுகுளங்கள் மத்திய குளங்கள் காணப்படுகின்றன இவைகள் உடைப்பெடுக்கவோ அல்லது நீர்கசிவு ஏற்படுகின்ற சூழ்நிலையில் அவற்றை பாதுகாக்கவேண்டியதும் நீரை தேக்கி வைத்திருக்க வேண்டியதுமான தேவைப்படு இருக்கின்றது
எனவே இவற்றுக்கான ஆயத்தங்களை செய்வதற்கா கமநலசேவைகள் திணைக்களம்,நீர்பாசன திணைக்களங்களுடன் இணைந்து படையினரும் தங்கள் பங்களிப்பினை வழங்குவதற்கு ஒப்புதலை தெரிவித்துள்ளார்கள் கடந்த காலங்களிலும் அவர்கள் முழுமையான செயற்பாடுகளை வழங்கியுள்ளார்கள்.
இதேவேளை கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக 427 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது ஒருசில இடங்களில் வீடுகள் அழிவுகள் ஏற்பட்டுள்ளன அவற்றுக்கான நிதி உதவி அனர்த்த நிவாரணசேவைகள் நிலையத்தினால் வழங்கப்பட்டு அவற்றை மக்களுக்கு வழங்கும் சேவையினையும் மேற்கொண்டுள்ளோம்.
அதேவேளை இன்றைய நாள் (06) கொக்குத்தொடுவாய் பகுதியில் நீர் பெருக்கம் காரணமாக 28 குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்கான நிவாரணங்கள் அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

குறிப்பு:>