Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் ஆட்கடத்தி கப்பம் கோரிய முஸ்லீம் நபர் கைது!

நாரம்பல குருநாகல் பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை கடத்திக்கொண்டுசென்று முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் வைத்துக்கொண்டு ஒருஇலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ள நிலையில் சிலாவத்தை பகுதியில் வைத்து கடத்தல்காரனான 35 அகவையுடை முகமட் ஜவ்வர் என்பவரை முல்லைத்தீவு பொலீசார் கைது செய்துள்ளார்கள்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் குருநாகல்பகுதியினை சேர்ந்த நபர் ஒருவரை கடத்திக்கொண்டு வந்துள்ளார் இந்த நபரை காணவில்லை என உறவினர்களால் குருநாகல் நாரம்பல பகுதி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது இதற்கமைய நாரம்பல பொலீசார் தேடுதல் மேற்கொண்ட நிலையில் முல்லைத்தீவு பொலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட பொருங்குற்றப்பிரிவு பொலீஸ் அதிகாரி தலைமையிலான குழுவினர்கள் நேற்று 05.12.18 இரவு சிலாவத்தைபகுதியில் உள்ள அவரின் வீட்டில்வைத்து கைது செய்துள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்ட கடத்தல் காரனையும்,கடத்தப்பட்டவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக முல்லைத்தீவு பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

குறிப்பு:>