Take a fresh look at your lifestyle.

முல்லைத்தீவில் சிவில்சமூக பாதுகாப்பு திணைக்களம் நடத்திய ஆர்ப்பாட்டம்!

நிலவும் சமாதானத்தை நீடிக்க வேண்டி அமைதி பேரணி ஒன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றுள்ளது.
06.12.18 அன்று புதுக்குடியிருப்பில் முல்லைத்தீவு மாவட்ட மக்கள் என்ற பெயரில் நிலவும் சமாதானம் நீடிக்க வேண்டி அமைதி பேரணிஒன்றும் மனுகையளிப்பு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இதில் படையினரின் கீழ் இயங்கும் சி.எஸ்.டி எனப்படும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினை சேர்ந்த ஊழியர்களே அதிகளவில் கலந்து கொண்டுள்ளார்கள் ஜநூறுவரையானவர்கள் இதில் கலந்துகொண்டுள்ளார்கள்.
அண்மையில் முல்லைத்தீவில் பல இடங்களில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இருந்து ஆரம்பமாகிய இந்த பேரணி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்றடைந்துள்ளது.
அவர்கள் கொடுத்த அறிக்கையில்..
தற்போது அரசிற்கு எதிரான ஆயுத வன்முறைகள் சில முகம் தெரியாத அணிகளால் சில புலம்பெயர் சக்திகளின் துணையுடன் புலிச்சாயம் பூசப்பட்டு மேற்கொள்ளப்படுதல் கண்கூடு.
இன்னிலமை தொடருமானால் மீண்டும் நாம் போர்ச்சூழலுக்குள் தள்ளப்படுவோம் கடந்துவந்த உயிர்வலிக்கும் கொடூரமான இரத்தக்கறை படிந்த வலிகளை மீண்டும் காணவும் நேரிடும்என்ற துக்கம் .
எம்மை ஆட்கொண்டுள்ளது அரசிற்கு எதிரான ஆயுத வன்முறையினை தூண்டுபவர்கள் யாராயினும் உரியமுறையில் சட்டத்திற்கு முன் நிறுத்தப்படவேண்டும் தண்டனைகள் வழங்கப்படவேண்டும் என்றும் நாட்டின் அமைதியை நிலைநாட்டி எம் அமைதியான இயல்புவாழ்க்கையினை உறுதிப்படுத்துமாறு அரசை கேட்டுக்கொள்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

குறிப்பு:>