Take a fresh look at your lifestyle.

இரணைமடுக்குளம் திறந்துவைப்பு: கூட்டமைப்பினர் புறக்கணிப்பு

அரசியல் குழப்பநிலைகளுக்கு மத்தியில் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் அமைக்கப்பெற்ற இரணைமடுக்குளத்தை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தார். இந்த நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முற்றாகப் புறக்கணித்தனர்.

போருக்கு பின்னர் மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த இரணைமடு குளம் வான் கதவுகளை சம்பிரதாய பூர்வமாக திறந்து வைக்கும் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பங்குபற்றவில்லை. நாட்டில் தற்போதுள்ள அரசியல் குழப்ப நிலையின் காரணமாகவே கூட்டமைப்பினர் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கிளிநொச்சிக்கு விஜயம் விஜயம் செய்து வான்கதவு திறப்பில் பங்குகொண்டனர்.ஆனால், நாட்டில் அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.

ஜனாதிபதியின் விஜயத்தை முன்னிட்டு மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் கே.பி மகிந்த குணரட்ன, கிளிநொச்சி இராணுவ உயரதிகாரிகள், நீர்ப்பாசனத் திணைக்கள பொறியியலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரடியாக இரணைமடு குளத்திற்கு சென்று ஏற்பாடுகள் தொடர்பில் அவதானித்திருந்தனர்.

குறிப்பு:>