Take a fresh look at your lifestyle.

சு.கவிலிருந்து என்னை ஓரம் கட்ட முயற்சி: குமுறுகிறார் சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டுக்கு வருமாறு அழைப்பு கிடைக்கப் பெறாமையாலேயே அதில் பங்கேற்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தொடர்ந்தும் சுதந்திரக் கட்சியிலிருந்து தன்னை ஓரங்கட்டும் நடவடிக்கை மிகவும் மும்முரமாக முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. அந்த மாநாடு தொடர்பான சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதாவது கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மாநாடு குறித்து இன்று வரை எனக்கு எவ்வித அறிவித்தலும் கிடைக்கப் பெறவில்லை.

கம்பஹா மாவட்ட அமைப்பாளர்களுக்கு மாநாடு குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனைச் சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்டச் செயலாளர் லசந்த அழகியவண்ண வழங்கியுள்ளார்.

சுதந்திரக் கட்சியிலிருந்து என்னைத் தொடர்ந்தும் ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை சம்மேளனத்திற்கு அழைப்படாமை ஊடாக வெளிப்படுகின்றது. எனவேதான் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சுதந்திரக் கட்சி சம்மேளனத்தை தவிர்த்துக்கொண்டேன்” என்று சந்திரிகா தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>