Take a fresh look at your lifestyle.

தனித்து வாழ்ந்த முதியவர் கிணற்றில் சடலமாக

 

வடதமிழீழம், யாழ்ப்பாணம், வடமராட்சி காரணவாய் பகுதியில் தனித்து வாழ்ந்த்து வந்த முதியவர் தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் காரணவாயைச் சேர்ந்த மாணிக்கம் தெய்வேந்திரன்(வயது 71) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவர் காரணவாய் பகுதியில் நீண்டகாலமாக தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வாழ்ந்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டக் கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக நெல்லியடிப் காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர். சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பு:>