Take a fresh look at your lifestyle.

தொடரும் மலையக மக்களின் போராட்டம்

 

ஆயிரம் ரூபாய் அடிப்படை சம்பளத்தை வலியுறுத்தி பெருந்தோட்ட தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஐந்தாவது நாளாக இன்றும் (வெள்ளிக்கிழமை) தொடர்கிறது.

பெருந்தோட்ட தொழிலாளர்களது சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உடன்படிக்கையில் நாளாந்த அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் அதிகரிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியே இவர்கள் இவ்வார்ப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் இவ்விடயம் தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்துடன் தொழிற்சங்கங்கள் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் அது தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையிலேயே பெருந்தோட்ட தொழிலாளர்கள் தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக நாட்டின் பல தரப்பினரும் போராட்டங்களை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>