Take a fresh look at your lifestyle.

தடைசெய்யப்பட்ட களைநாசினியுடன் இருவர் கைது!

தடைசெய்யப்பட்ட களைநாசினியை கொண்டுசெல்ல முற்பட்ட இருவரை கைது செய்துள்ளனர்.

செட்டிக்குளம் காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீரவின் தலைமையில் குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றது.

இன்று காலை வட தமிழீழம்  மன்னாரில் இருந்து  கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு வாகனத்தை செட்டிக்குளம் நகர்ப்பகுதியில் வழிமறித்து பொலிஸார்  சோதனையிட்டபோதே குறித்த களைநாசினி மறைத்து கொண்டுசெல்லப்படுவது தெரியவந்தது.

குறித்த சொகுசு வானில் இருந்து 600 கிராம் அளவில் சிறுபைகளாக பொதிசெய்யபட்ட 6 ஆயிரம் கிலோ நிறையுடைய தடைசெய்யப்பட்ட கிளைபோசெட் மருந்துகளை சிங்கள இனவாத காவல்துறையினர் கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் 39 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து வானில் பயணித்தவர்களை கைதுசெய்து  , பயணித்த வாகனத்தையும் காவல்  நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

முக்கிய குறிப்பு:-

தமிழீழப்பிரதேசம் முழுமையாக சிங்கள இனவாத அரசின் இராணுவத்தாலும் காவற்துறையினாலும் உளவுப்பிரிவினாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் அவர்களிற்கு தெரியாமல் கொலைகள் கொள்ளைகள் போதைபொருள் கடத்தல்கள் கற்பழிப்புக்கள் நடைபெறமுடியாதென்பது அனைவரிற்கும் தெரிந்த விடயமாகும். சிங்கள அரசின் இனப்படுகொலையின் ஓர் பகுதியாக விளங்கும் போர்க்குற்றம், மானிடத்திற்கெதிரான குற்றம் போன்றவற்றிற்கு எதிராக ஜ.நா.வில் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் தமிழ்மக்கள் மீது தனிப்பட்ட ரீதியில் தாக்குதல்களை நடாத்தி போர்க்குற்றச்சாட்டுகளிற்கு சாட்சிகளாக இருப்பவர்களை அகற்றுவதையே சிங்கள இனவாத அரசு செய்கின்றது. இதை விளங்கிக்கொண்டு இவ்விடயத்தினை சர்வதேச நிறுவனங்கள் மூலம் வெளிக்கொண்டு வருவது பொறுப்பான அரசியல் தலைமைகளின் கடப்பாடாக அமைகின்றது.

 

குறிப்பு:>