Take a fresh look at your lifestyle.

தீர்ப்பு அடுத்த வாரம்; கூறுகிறார் சுமந்திரன்

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நேற்று உயர்நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணையின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நீதிமன்ற விவாதங்கள் 4 நாட்கள் நடைபெற்றன. இறுதி விவாதங்களைக் கேட்ட நீதியரசர்கள் விரைவில் தமது முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளனர். அதற்கான தினம் குறிக்கப்படாத நிலையில், அதுவரை இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் தீர்ப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும்”  எனக் கூறினார்.

இதேவேளை மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடை உத்தரவுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ செய்த மேன்முறையீட்டு மனு தொடர்பிலும் சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், இது தொடர்பில் எமக்கு தெரியாது. இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் தினங்களில் எடுத்துக்கொள்ளப்படும் – என கூறினார்.

குறிப்பு:>