Take a fresh look at your lifestyle.

மாநகர சபைக்கு புதிய வாகனங்கள் கொள்வனவு

 

தென்தமிழீழம், மட்டக்களப்பு மாநகர சபையின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில் புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

திண்மக் கழிவகற்றல் சேவையினை மேம்படுத்தும் நோக்கிலும், துரித கழிவகற்றல் செயற்பாடுகளின் ஊடாக சுத்தமான மாநகரை உருவாக்கும் நோக்கிலும் மட்டக்களப்பு மாநகர சபையால் இந்த புதிய வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

“மக்களது வரிப்பணத்தில் கொள்வனவுசெய்த இந்த வாகனங்கள் மக்கள் சேவையில்” என்னும் தலைப்பில் இன்று (சனிக்கிழமை) இந்த வாகனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்படி கொள்வனவு செய்யப்பட்ட இரண்டு கொம்பக்டர் வாகனங்களையும், இழுவைப் பெட்டியுடன் கூடிய நான்கு உழவு இயந்திரங்களையும் மக்களின் பயன்பாட்டிற்காக கையளிக்கும் நிகழ்வானது மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாநகரத்திற்குள் வதியும் மக்களின் வரிப்பணத்தின் ஊடாக, மாநகர சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்களுக்கான சுகாதார சேவையை மேலும் வினைத் திறனாக மேற்கொள்ள ஏதுவாக சுமார் 22 மில்லியன் ரூபாய்கள் செலவில் இவ்வாகனங்களை தாம் கொள்வனவு செய்துள்ளதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

கொள்வனவு செய்யப்பட்ட குறித்த வாகனங்களை மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைகள் குழு தலைவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பு:>