Take a fresh look at your lifestyle.

வழக்குகளுக்குப் பயமில்லை; எதிர்கொள்ள தயார்! மஹிந்த சவால்

வழக்குகளுக்குப் பயந்தே நாம் அரசைப் பொறுப்பேற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியினர் சுமத்தும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், தனக்கு எதிராகச் சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டையும் நீதிமன்றில் சந்திக்கத் தயாராகவிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே மஹிந்த மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“என்னை அரசியல் ரீதியில் பழிவாங்குவதற்காகத் தேவையான வழக்குகளைத் தாக்கல் செய்து, தற்போது அதற்குத் தேவையான நடவடிக்கைகளையும் ஐ.தே.க. எடுத்துள்ளது.

இன்று ஜனாதிபதி இருக்கின்றார். செயலாளர் இருக்கின்றார். அந்த அரசில் நாம் சேவை செய்கின்றோம். அத்துடன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதுவும் சொல்ல முடியாது. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நாம் எதிர்க்கின்றோம்.

உலகில் எங்குமே நிகழாத சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. அதாவது உலகில் முதற் தடவையாக நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாம் அரச பணியாளர்கள். அதனால் இந்தத் தீர்ப்பு தவறு என்ற எண்ணத்திலேயே நாம் இருக்கின்றோம்” என்றார்.

குறிப்பு:>