Take a fresh look at your lifestyle.

ஶ்ரீலங்கா ஜனாதிபதி தேர்தலிற்கு உடனடி வாய்ப்பு இல்லை

 

உடனடியாக ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

தெரிவித்துள்ளார். ஏனையவர்களின் நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப தான் செயற்படப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி தேர்தலினை நடத்துவதா இல்லையா என்பது குறித்து தானே தீர்மானிக்கவேண்டும் எனவும் தனக்கு அவ்வாறான எண்ணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒன்றின்போதே இனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டாவது தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் தற்போதைக்கு இது குறித்து பதிலை தெரிவிக்க முடியாது எனவும் அதற்காக காலம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்..

கடந்த ஒரு மாதகாலமாக மணித்தியாலத்திற்கு ஒரு மாற்றம் நிகழ்கின்றது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இன்னும் ஒரு வருட காலத்தில் என்னநடக்கும் என யாரும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பு:>