Take a fresh look at your lifestyle.

மக்களின் எதிர்பார்ப்பு பொதுத் தேர்தலே: மஹிந்த

பதவிகளை எதிர்பார்த்து தாம் ஒரு போதும் செயற்படவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போதைய மக்களின் எதிர்ப்பார்ப்பு பொது தேர்தல் ஒன்றே எனவும் அவர் குறிப்பிட்டார்.

கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின், மகா நாயக்கர் இத்தேபானே தம்மாலங்கார தேரரை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.

தற்போது அரசியலில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்களுக்கான அரசியலில் தாங்கள் ஈடுபட்டு வருதாக தெரிவித்தார். ஆனால் பதவிகளைப் பெறுவது தங்களது எதிர்ப்பார்ப்பு இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பு:>