Take a fresh look at your lifestyle.

எது முள்ளிவாய்க்கால்

நெஞ்சழுத்த காரர்களால்
பிஞ்சழுகிப் போன தேசம் முள்ளிவாய்க்கால்
கட்டிய கோட்டையெல்லாம்
வெட்டிய காடுகளாய் போன தேசம்
முள்ளிவாய்க்கால் 
முற்பகலின் நாத்துகள்
பிற்பகலின் விதைகளான தேசம்
முள்ளிவாய்க்கால் முப்பாட்டன் கண்ட வீரம்
முடக்கியொழிக்கப் பட்ட தேசம்
முள்ளிவாய்க்கால் புகை கொண்ட மேகங்களால்
புதையுண்டு போன தேசம்
முள்ளிவாய்க்கால் 
இனமானம் ஒன்றுக்காய்
பிணவாடை கொண்ட தேசம்
முள்ளிவாய்க்கால் அரவணைக்க யாருமின்றி
அநாதையாய் உணர்ந்த தேசம்
முள்ளிவாய்க்கால் 
தடை செய்த குண்டுகளையும்
தன் மார்பில் புதைத்த தேசம்
முள்ளிவாய்க்கால் 
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அங்கங்கள் புதைந்த தேசம்
முள்ளிவாய்க்கால் பரணி பாடும் பேய்கள் கூட
பயந்தொளிந்து போன தேசம்
முள்ளிவாய்க்கால் 
சதை பரந்த முள்ளிவாய்க்காலில்
விதையாக விதைந்தது

வீர விதைகள்
ஆண்டு எத்தனை ஆனாலும்
 விதைந்தது விருட்சமாகும் என பறைசாற்றும்

எம் தேசம் முள்ளிவாய்க்கால்

சுதர்சினி நேசதுரை