Take a fresh look at your lifestyle.

சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- ஒருவர் கைது

சென்னை கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று மிரட்டல் வந்துள்ளது.
காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.இதனையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.  இந்த நிலையில், டிஜிபி அலுவலகத்திற்கு மிரட்டல் விடுத்தாக சேலத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.