Take a fresh look at your lifestyle.

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிப்பதில் உறுதியாக உள்ளோம்.!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்களாக சிறைவாசம் அனுபவித்துவருகிற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதில் தமிழக அரசுக்கு எவ்வித மாற்று கருத்து இல்லை எனவும், அவர்களை விடுதலை செய்வதில் அரசு உறுதியாக உள்ளது எனவும் கருத்து தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜீ.

துாத்துக்குடி மாவட்டம், கட்டலாங்குளம் கிராமத்தில் சுதந்திரப்போராட்ட வீரர் அழகுமுத்துகோனின் பிறந்தநாள் விழாவில் அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்தார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்க வேண்டுமென எங்கள் தலைவர் ஜெயலலிதாதான் பேரவையில் தீர்மானம் இயற்றினார். ராஜீவ் காந்தியின் குடும்பத்தினர், தற்போது அவர்களை மன்னித்துவிட்டோம் என்று கருத்து தெரிவிக்கின்றனர். அவர்களது கருத்தை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிற நிலையில், தமிழக அரசு 7 பேரை விடுதலைசெய்வதில் உறுதியாக உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.