Take a fresh look at your lifestyle.

எங்களில் தவறு உள்ளது இனியும் நடக்காது என்கிறார் மகிந்தரின் புதல்வர்!

 

ஶ்ரீலங்கா, முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச அரசு சில விட­யங்­க­ளில் தவ­றி­ழைத்­தது. அந்த அரசை மக்­கள் தோற்­க­டித்­த­னர். அந்­தப் பிழை­கள் தொடர்­பில் தற்­போது நாம் விழிப்­ப­டைந் துள்­ளோம். எதிர்­வ­ரும் ஆட்­சி­யில் அவற்­றைத் திருத்­திக்­கொண்டு பய­ணத்தை முன்­னெ­டுப் போம்.
இவ்­வாறு தெரித்­துள்­ளார் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் நாமல் ராஜ­பக்ச.

மகிந்த அணி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு பொரளை என்.எம்.பெரேரா நிலை­யத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில் கருத்­துத் தெரி­வித்­த­போதே அவர் இவ்­வாறு கூறி­னார்.
அவர் தெரி­வித்­த­தா­வது- ,

ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தற்­கும் நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­க­ளுக்­கு­மென இலங்கை, மியன்­மார், நைஜீ­ரியா ஆகிய நாடு­க­ளுக்கு அமெ­ரிக்கா 595 மில்­லி­யன் டொலர் நிதி வழங்­கி­யுள்­ளது என்று 2016 ஆண்டு வெளி­யி­டப்­பட்ட நிதி­ய­றிக்­கை­ யொன்­றில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆட்சி மாற்­றத்­துக்கே நிதி வழங்­கப்­பட்­டுள்­ளது.
மகிந்­த­வின் அர­சைக் கவிழ்ப்­ப­தற்கு பன்­னா­டு­க­ளி­ட­மி­ருந்து நிதி­பெ­றப்­பட் டுள்­ளது. அந்த நிதி யாருக்­குக் கிடைத்­துள்­ளது?, அது எதற்­கா­கச் செல­வி­டப்­பட்­டுள்­ளது? என்­பது தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும்.

‘நியோர்க் ரைம்ஸ்’ பத்­தி­ரி­கை­யில் வெளி­யி­டப்­பட்ட செய்­தி­யைப் போன்ற செய்தி 2015ஆம் ஆண்டு அரச ஊட­கத்­தில் செய்தி வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அதை அடிப்­ப­டை­யாக் கொண்டே இந்­தச் செய்­தியை ‘நியோர்க் ரைம்ஸ்’ பத்­தி­ரிகை வெளி­யிட்­டுள்­ளது.

முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு பன்­னா­டு­க­ளு­டன் தொடர்­பு­க­ளைப் பேணு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தார். சீனா தவிர வேறு நாடு­கள் அதற்கு முன்­வ­ர­வில்லை. சீனா அதற்கு முன்­வந்­தது.

அத­னால் சீனா­வுக்கு எதி­ராக இவ்­வாறு குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இது மேற்­கத்­தேய மற்­றும் கிழக்­கத்­தேய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான அதி­கா­ரப் போராட்­ட­மாக மாறி­யுள்­ளது. துர­திஷ்­ட­வ­ச­மாக இலங்கை சிக்­கிக்­கொண்­டுள்­ளது – என்­றார்.