Take a fresh look at your lifestyle.

காணாமல் போன எவரும் இராணுவ முகாம்களில் இல்லையாம்!

காணாமல் போன எவரும் இராணுவ முகாம்களில் இல்லை என சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர உறுதியாக கூறியுள்ளாா்.

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் கடந்த 1996ஆம் ஆண்டு,

இருந்த இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் தமது உறவுகளை கைது செய்துள்ளது மட்டுமன்றி காணாமல் ஆக்கியுள்ளனா்.

இவ்வாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி யாழ்.மேல் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுவானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் இம் மனு மீதான விசாரணையானது இடம்பெற்றது.

மனுத்தாரர் தரப்பு சட்டத்தரணிகளான சுபாஜினி மற்றும் திருக்குமரன் ஆகியோர், இவ் மனுத்தாரர்கள் தமது உறவுகளை இராணுவமே கைது செய்து சென்றதாகவும்,

தற்போதும் தமது உறவுகள் இராணுவ முகாம்களில் இருப்பதாகவும்,

அதனை சிலர் கண்டதாகவும் கூறிவருவதுடன் அதனை உறுதியாக நம்பியுள்ளார்கள் என வாதிட்டனர்.

இதற்கு பதிலளித்து பிரதி சொலிஸ்ட.ர் ஜென்றல் சேத்திரி,

குறித்த மனுத்தாரர்கள் கூறுவது போல எந்தவொரு இராணுவ முகாம்களிலும் காணமல் போனோா் இல்லை.

அவ்வாறு அவா்கள் அங்கு இருந்தால் நானே முதலில் அவர்களை நீதிமன்றில் முன்னிறுத்தி அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொடுப்பேன்.

மேலும் நாங்கள் தமிழர்களுக்கும், எவருக்கும் எதிரானவர்கள் அல்ல.

இராணுவ முகாம்களில் அவ்வாறான எவரும் இல்லையென கூறினாா்.

இதன் பின் இராணுவ சட்டத்தரனி, ஜக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் வந்து இராணுவ முகாம்களை சோதனையிட்டனர்.

ஆயினும் அவர்கள் கூட இராணுவ முகாம்களில் எவரும் இருப்பதாக கண்டறியவில்லை என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.