Take a fresh look at your lifestyle.

தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சிண்டு முடியும் ராஜித!

 

ஶ்ரீலங்கா, முஸ்லிம் கலாசார அமைச்சராக சிங்களவர் ஒருவர் இருக்க முடியும் என்றால் ஏன் முஸ்லிம் ஒருவர் இன்னுமொரு கலாசார அமைச்சின் அமைச்சராக முடியாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இந்து கலாசார பிரதியமைச்சராக, காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமைக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருவதாகவும், இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென ஊடகவியலாளர் ஒருவர் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் கூறினார்