Take a fresh look at your lifestyle.

தவறான முடிவால் சிறுகுற்றம் புரிந்தவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டார்: வவுனியா சிறைச்சாலையில் சம்பவம்!

வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மீது சிறைக்காவலர்கள் மிருகத்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சிறைக்கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது.

வவுனியா சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்ட சிறைக் கைதி ஒருவருக்கு சிறைக்கு வெளியே இருந்து பொதி ஒன்று கிடைத்துள்ளதாகத் தெரிவித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சிறைக் கைதி வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பொதி வெளியில் இருந்து சிறைச்சாலைக்குள் வந்ததாகவும் அப்பொதிக்கும் குறித்த கைதிக்கும் சம்மந்தம் இல்லாத நிலையிலேயே கைதி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அப் பொதியில் சிறியளவில் கஞ்சா போதைப் பொருள் இருந்ததாகவும் தெரியவருகிறது.

குறித்த சிறைக்கைதி சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 32வயதுடைய இளம் குடும்பஸ்தர் என்பதுடன் சிறிய குற்றம் ஒன்றுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வவுனியா சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிர்பிடத்தக்கது.