Take a fresh look at your lifestyle.

தியத்தலாவ விமானப்படை தளத்தில் குண்டுவெடிப்பு!

தியத்தலாவ விமானப்படை பயிற்சிக் கல்லூரிக்குள் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

பயிற்சி நடவடிக்கையொன்றின்போது இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில், இரு பயிற்றுவிப்பாளர்களும், ஒரு பெண் பயிற்சாளரும் காயமடைந்துள்ளனர்.

கைக்குண்டொன்று வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.