Take a fresh look at your lifestyle.

புலிப்பயம் இன்னும் நீங்கவில்லையா  மைத்திரிக்கு!

ஶ்ரீலங்கா, முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு நிதி நிவாரண உதவிகளை வழங்குவது புலிகளை ஆதரிப்பதற்கு சமம் என ஜனாதிபதி அமைச்சரவையில் தெரிவித்துள்ளாரென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன சுட்டிக் காட்டியுள்ளார்.

நேற்று காலை தகவல் திணைக்­க­ளத்தில் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நடைபெற்றது.இதில் கருத்து தெரிவிக்கும் போதே அவா் இதனைக் கூறியுள்ளாா்.

மேலும் அவா்,

இலங்­கையில் இடம்­பெற்ற யுத்­தத்தின் போது,காண­மால்­ போ­னோரின் குடும்­பங்­க­ளுக்கும், யுத்­தத்தில் உயி­ரி­ழந்­தோரின் குடும்பங்களுக்கும், யுத்­தத்தில் உபா­தை­க­ளுக்கு உள்­ளான நபர்­க­ளுக்கும் மற்றும்,

முன்னாள் விடு­த­லைப்­புலி போரா­ளி­க­ளுக்கும் என அனை­வ­ருக்­கு­மான வாழ்­வா­தார நிவா­ரண தொகை வழங்­கப்­ப­டு­வது குறித்து அமைச்சர் சுவா­மி­நாதன் கடந்த அமைச்­ச­ர­வையில் அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்­றினை தாக்கல் செய்­தி­ருந்தார்.

ஆயினும் குறித்த அமைச்சரவை பத்­தி­ரத்தில் குறிப்­பி­டப்­பட்ட முன்னாள் புலி உறுப்பினா்கள் என்ற சொல்லை அகற்­று­மாறும்,
அவர்­க­ளுக்கு நிதி நிவா­ர­ணங்­களை செய்­வது புலி­களை ஆத­ரிப்­ப­தற்கு சம­மா­னது என்ற எண்­ணப்­பாட்டை ஏற்­ப­டுத்­தி ­விடும் என கூறிய ஜனா­தி­பதி குறித்த அமைச்சரவை பத்திரத்தை நிராகரித்துள்ளாா்.

இந்த நாட்டில் புலி­களை ஒரு­போதும் அங்­கீ­க­ரிக்க முடி­யாது.
ஆன போதும் முன்­னைய ஆட்­சியில் முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் புனா்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனா்.

அரச நிவா­ரண நிதி­க­ளுக்குள்ளும் சாதா­ரண மக்­க­ளுக்கு வழங்­கப்­படும் உத­வி­களின் கீழ் அவர்­களை கொண்­டு­வர முடி­யாது.

யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட வடக்கு மக்­க­ளுக்கு செய்ய வேண்­டிய நிதி உத­விகள் மற்றும் நிவா­ர­ணங்கள் என்­பன தாம­த­மா­கி­யுள்­ளன.

அடிப்­படை வச­தி­களை அவர்­க­ளுக்கு செய்­து­ கொ­டுக்க வேண்டும்.அதேபோல் விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களில் பாதிக்­கப்­பட்ட ஏனைய பகுதி மக்­க­ளுக்கும் நிவா­ர­ணங்­களை வழங்க வேண்டும்.

அதற்­கான பிரத்­தி­யேக அமைச்­ச­ரவை பத்­திரம் உள்­ளது.

நாம் எவரையும் புறக்கணிக்கவில்லை என அவா் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.