Take a fresh look at your lifestyle.

மத ரீதியான முரண்பாடுகளை தோற்றுவிக்க அரசாங்கம் முஸ்தீவு

 

ஶ்ரீலங்கா, இந்து மத விவ­கார அலு­வல்­கள் பிரதி அமைச்­சர் பதவி இஸ்­லா­மிய மதத்­தைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் காதர் மஸ்­தா­னுக்கு வழங்­கப்­பட்­டமை தொடர்­பில் இந்­துக்­க­ளி டையே பெரும் எதிர்ப்­பு­கள் கிளம்­பி­யுள்ளன.

இது திட்­ட­ மிட்டு நடத் தப்­ப­டும் ஒடுக்­கு­முறை என்று பல தரப்­புக்­க­ளும் கண்­ட­னம் வெளி­யிட்­டுள்­ளன.

தமிழ் அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­ வர்­கள், உறுப்­பி­னர்­கள், இந்து அமைப்­பு­க­ளைச் சேர்ந்­தோர், பொது அமைப்­பு­க­ளைச் சேர்ந்­தோர் அர­சின் இந்த நட­வ­டிக்கை தொடர்­பில் கடும் விமர்­ச­னங்­களை வெளி­யிட்­டுள்­ள­னர்.

அந்த அமைச்­சுப் பத­வியை மீளப் பெற்­றுக் கொள்­ளா­விட்­டால் அர­சுக்கு எதி­ராக போராட்­டங்­களை நடத்த வேண்டி நிர்ப்­பந்­தம் வரும் என்­றும் என்­றும் அவர்­கள் கருத்­துத் தெரி­வித்­துள்­ள­னர்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்நு ஒரு சில பிரதி அமைச்­சுப் பொறுப்­பு­க­ளைப் பகிர்ந்­த­ளித்­தி­ருந்­தார். காதர் மஸ்­தானை இந்து கலா­சார அமைச்­சின் பிரதி அமைச்­ச­ராக அவர் நிய­மித்­தி­ருந்­தார். அதை­ய­டுத்தே இந்­தச் சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளது.

இந்து மத விவ­கார அலு­வல்­கள் பிரதி அமைச்­சுப் பத­வி­யா­னது இஸ்­லாம் மதத்­தைப் பின்­பற்­று­கின்ற ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ருக்கு வழங்­கி­ருப்­பது அரசு திட்­ட­மிட்டு நடத்­தும் ஒடுக்கு முறை என்று பல­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

பிரதி அமைச்­சர் நிய­ம­னம் இந்து மக்­க­ளி­டையே சர்ச்­சயை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என்­பதை அறி­கின்­றேன். இது தொடர்­பில் உரிய தரப்­புக்­குக் கடி­தம் மூலம் தெரி­யப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுப்­பேன் என்று இந்து மத அலு­வல்­கள் அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் குறிப்­பிட்­டுள்­ளார்.

அதே­வேளை முன்­ன­ரும் இவ்­வாறு ஒரு நிய­ம­னம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது என்­றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இந்த விட­யம் சமூக வலைத் தளங்­க­ளி­லும் பேசு பொரு­ளா­கி­யுள்­ளது. பெரும்­பா­லா­னா­வர்­கள் அர­சின் இந்த நட­வ­டிக்­கைக்­குக் கடும் கண்­ட­னங்­க­ளைத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.