Take a fresh look at your lifestyle.

ஸ்ரீலங்கா தேசியக்கொடி ஏற்ற மறுத்த விவகாரம், சர்வேஸ்வரனுக்கு ரி.ஐ.டி அழைப்பு!

 

ஸ்ரீலங்கா, பயங்கரவாத தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு வட மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் காவல்துறை ஊடகப் பேச்சாளர்,காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகரவிடம் தெரிவித்த போது

வவுனியாவிலுள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காகவே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய, வட மாகாண கல்வி அமைச்சர் ஜூன் மாதம் 5 ஆம் திகதி பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.