Take a fresh look at your lifestyle.

உயிர் இருக்கும் வரை போராடுவேன் இயக்குநர் – வ.கௌதமன்.!

கடந்த மாதம் 24 ம் திகதி அன்று  இயக்குநர் வ.கௌதமனை சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டில் வைத்து தமிழக காவல்துறையினர்  கைது செய்தனர். அவர் மீது சட்டவிரோதமாக கூடுதல் , அரசு ஊழியரை வேலை செய்ய விடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்தது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டார்  கைது செய்யப்பட்ட  வ.கௌதமன் புழல் சிறையில் இருந்து தற்போது பிணையில் வெளிவந்துள்ளார்

அறத்தின் மீது நம்பிக்கை உள்ளது சட்டத்தின் வழியில் தொடர்ந்து போராடுவேன் என இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.  . எத்தனை முறை சிறை சென்றாலும் உயிர் இருக்கும் வரை போராடுவேன் எனவும் தெரிவித்தார்.