Take a fresh look at your lifestyle.

இனவழிப்புத்தடுப்பு உத்தியினை உருவாக்கல்!

தமிழின அழிப்புச் சம்பவங்களை ஆவணப்படுத்தலுக்கும்  இனவழிப்புச் சம்பவங்களுக்கு நீதியை பெறுதலுக்கும் கணித மாதிரி கணணித் தொழில்நுட்ப இனவழிப்புத்தடுப்பு உத்தியினை உருவாக்கல்

இலங்கையில் பல தசாப்தங்களாக தமிழர்களுக்கு நிகழும் கொடூரச் சமபவங்களும், அண்மையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிகழ்ந்த படுகொலைகளும் உலகத் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து இன அழிப்பினைத் தடுப்பதற்கான உத்தியை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலையினை உருவாக்கி உள்ளது. எனவே தமிழர்கள் தமிழினப் படுகொலைகளைத் தடுப்பதற்கான கட்டமைப்பாக்கப்பட்ட அமைப்பினை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இதனை தமிழர்களின் இனப்படுகொலைகளைத் தடுப்பதற்கான உத்தி (GPST) (Genocide Prevention Strategy for Tamil) எனலாம். இதன் மூலமே இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக தமிழர்கள் கொல்லப்படுவதனைத் தடுக்கலாம்.

இனப்படுகொலைத் தடுப்பு முயற்சியில் குறுகிய காலச் செயற்திட்டங்களும் அடங்கும். நீண்ட காலச் செயற்திட்டங்களும் அடங்கும். உதாரணமாக காவேரி நீர்வரத்து இன்மையினால் விவசாயிகள் தற்கொலை செய்வது ஓர் இனப்படுகொலையின் வடிவமே ஆகும். இனப்படுகொலையினைத் தடுப்பதற்கான தொடர்பாடல் முறைகளாக முறைசார் ஒன்றுகூடல்கள், கூட்டங்கள், கணணிக்கடிதல் பரிமாற்றம் (email), தொலைபேசித்தொடர்பாடல்கள், கணனி இணையத் தொடர்பாடல்கள், ஊடக விழிப்புணர்வுகள் என்பன அமையும்.

இலங்கையில் இனவன்முறைகள் ஒவ்வொரு 6-8 வருட இடைவெளியில் உருவாகுவதை கணித மாதிரியில் காட்டலாம். இவை இலங்கைப் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் உடன் தொடர்புடையதாக அமைகின்றது. இதற்குக் காரணமும் இன ரீதியான முரண்பாடுகளே ஜனநாயக ரீதியாக பாராளுமன்றில் பெரும்பான்மையினையும், ஜனாதிபதித்தேர்தலில் வெற்றியினையும் அளிக்கும் அம்சமாகவுள்ளது. இலங்கையில் தேர்தல் ஜனநாயகத்தினை நிலைநிறுத்த இனவன்முறைகள் அத்தியாவசியமாகின்றன என்பதையும் இனப படுகொலைகளைத் தடுப்பதற்கான கணித மாதிரிகள் எடுத்துக் கூறுகின்றன.

தமிழின அழிப்புச் சம்பவங்களை ஆவணப்படுத்தலுக்கும் இனவழிப்புச் சம்பவங்களுக்கு நீதியை பெறுதலுக்கும் கணித மாதிரி கணணித் தொழில்நுட்ப இனவழிப்புத் தடுப்பு உத்தியினை பின்வருமாறு எடுக்கலாம்.

தமிழின அழிப்புச் சம்பவத்தின் வகை i இனால் குறிக்கப்படும்.

i1 – கொல்லப்படல்
i2 – காயப்படுத்தல்
i3 – சேதப்படுத்தல்
i4 – புலம்பெயரச் செய்தல்
i5 – உளத்தாக்கத்தை ஏற்படுத்தல்
i6 – வெடிகுண்டால் சுவாசத்தாக்கம்
i7 – வெடிகுண்டால் கண் தாக்கம்

இவ்வாறு i வேறுபடும்.

தமிழினஅழிப்புக்களால் பாதிக்கப்பட்டவர்களை ந இனால் குறிக்கலாம்.

1, 2, 3, …….. என பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ந வேறுபடும்.

தமிழின அழிப்புச் சம்பவம் α இனால் குறிக்கப்படும்.
தமிழின அழிப்பு நடைபெற்ற காலம் β இனால் குறிக்கப்படும்.
தமிழின அழிப்பு நடைபெற்ற இடம்; γ இனால் குறிக்கப்படும்.
தமிழின அழிப்பினை நடத்தியோர்; 𝛿 இனால் குறிக்கப்படும்.
தமிழின அழிப்புக்கு உரிய நீதி வழங்கல் θ இனால் குறிக்கப்படும்.

Genocide documentation justice Mathematics Model

Genocide Prevention Strategy for Tamil (GPST)

A≡B≡C≡D≡E

A≡a fαie+ p

தமிழின அழிப்புச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் யு எனக் கணணியில் சேகரிக்கப்படும்.
இங்கு a, p என்பன மாறிலிகள்

B ≡ b fβie+ q
தமிழின அழிப்புக்கள் நிகழ்ந்த காலங்கள் தொடர்பான தரவுகள் டீ எனக் கணணியில் சேகரிக்கப்படும்.
இங்கு a, p என்பன மாறிலிகள்

B ≡ b fβie+ q
தமிழின அழிப்புக்கள் நிகழ்ந்த இடங்கள் தொடர்பான தரவுகள் ஊ எனக் கணணியில் சேகரிக்கப்படும்.
இங்கு a, q என்பன மாறிலிகள்

C ≡ c fγie+ r
தமிழின அழிப்புக்கள் நிகழ்த்தியோர் தொடர்பான தரவுகள் னு எனக் கணணியில் சேகரிக்கப்படும்.
இங்கு c,r என்பன மாறிலிகள்

D ≡ d  fδie+ s
தமிழின அழிப்புகளுக்கான நீதி வழங்குவதற்கான தகவல்கள், தரவுகள் நு எனக் கணணியில் சேகரிக்கப்படும்.
இங்கு d, s என்பன மாறிலிகள்

இனப்படுகொலைக்கான உயிர் வாழும் ஆதாரங்கள்

சுவாச வடு
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிர்தப்பியோரின் நுரையீரல், சுற்றுச்சவ்வில், குண்டுவெடிப்பின் நுண் பதாhத்தங்கள் படிந்து உள்ளன.

விழி வடு
குண்டுவெடிப்புச் சம்பவங்களில் உயிர்தப்பியோரின் கண்ணின் விழிவெண்படலத்தில் குண்டுவெடிப்பு அதிர்ச்சியின் நிரந்தரப் பாதிப்புக்கள் விழிவெண்படலத்தில் பதிந்து இருக்கும்.

மனவடு
குண்டுவெடிப்புச் சம்பவங்கள் ஃ வன்முறைகள் பல உளநோய்களை ஏற்படுத்தும்.

நிறமூர்த்த வடு
வன்முறைகள்/குண்டுவெடிப்புக்கன் DNA  மூலக்கூற்றில் Cystein n இல் Methylation ஏற்பட ஏதுவாகின்றது. இதனால் உளநோய்கள், மலட்டுத்தன்மை, புற்றுநோய்கள் ஏற்படும் சாத்தியம் அதிகம்.

மருத்துவர் சி. யமுனாநந்தா