Take a fresh look at your lifestyle.

காவல்துறையின் விடுப்புகள் ரத்து!, முள்ளிவாய்க்காலுக்கு பாதுகாப்புக்கா?, அச்சுறுத்தலுக்கா?

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை அடுத்து வட மாகாணத்தில் கடமையாற்றும் அனைத்து காவல்துறையினருக்குமான விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாண பிரதிப் காவல்துறை மா அதிபரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நேற்று செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்களின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

காவல்துறை தலைமை அலுவலகத்தின் பணிப்புரைக்கு அமையவே விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னிட்டு பாதுகாப்பினை பலப்படுத்துவதற்காகவே காவல்துறையினரின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.