ஜப்பானிய ராஜதந்திரிகள் பார்வையிட்ட கண்ணி வெடி அகற்றும் பணிகள்
கிளிநொச்சி முகமாலை மேற்குப் பகுதியில் ஜப்பானிய அரசின் நிதியதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய ராஜதந்திரிகள் குழுவினர் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் வெடிக்காத நிலையில் காணப்படும் வெடி பொருட்களை அகற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி பகுதியில் கண்ணிவெடி அகற்றும் தன்னார்வத்தொண்டு நிறுவனமான டாஸ் நிறுவனம் இப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை அமெரிக்க மற்றும் ஜப்பானிய அரசுகளின் நிதியுதவியுடன் மேற்கொண்டு வருகின்றது.
ஜப்பானிய அரசின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்ணி வெடி அகற்றும் பணிகளை பணிகளை இன்று (27-06-2016) காலை 10.00 மணிக்கு இப்பகுதிக்கு விஜயம் செய்த ஜப்பானிய பிரதிநிதி Sato மற்றும் இலங்கைக்கான ஜப்பானியஅதிகாரியான நிறேசா வெல்கம் ஆகியோர் கண்ணி வெடி அகற்றும் பணிகளை பார்வையிட்டதுடன் இதன் பணிகள் மற்றும் சவால்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்
குறிப்பு:>