Take a fresh look at your lifestyle.

பாடசாலைக்களைச் சுற்றி இராணுவ முகாம்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைக்களுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படவேண்டும் என வலயக்கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயம் கிளிநொச்சி மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குரிய காணிகளின் ஒரு பகுதிகள் இராணுவக்கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகின்றன.

இவ்வாறு பாடசாலைகளுக்கு அருகில் இராணுவ முகாம்கள் காணப்படுவதால் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளின் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன என பல்வேறு தரப்புக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பூநகரி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஒரு பகுதி இன்றும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. இதேபோன்று கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் முன்பாகவுள்ள ஆரம்பப்பிரிவு காணி இராணுவ பயன்பாட்டில் இருந்து வருவதுடன் கிளிநொச்சி மத்தியகல்லூரி மைதானம் பாடசாலை நேரங்களிலும் ஏனைய நேரங்களிலும் இராணுவ பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்றும் இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன என பல தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பாடசலைகளின் அருகிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுதல் தொடர்பாக மாவட்ட இணைத்தலைவர்களுக்கு கோரிக்கை கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:>