ஆறு மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு
கடல் வழியாக கடத்தப்பட்ட ஆறு மில்லியன் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவரை விசேட தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணே தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றைய தினம் கைதுசெய்துள்ளனர்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த த. குலசிங்கம் என்பவரே இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்.குருநகர் சவக்காலை சந்தியில் வைத்து நேற்றைய தினம் அதிகாலை துவிச்சக்கரவண்டியில் இருபது பொதிகளில் நாற்பது கிலோ கேரளா கஞ்சாவினை கொண்டு பயணித்த வேளையிலேயே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையின் பின்னர், பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன், பொலிஸ் சாஜன்ட் குணசேன, பொலிஸ் கொஸ்தாபல் குணசேகரம், பொலிஸ் கொஸ்தாபல் ரெஜிகேசவன், பண்டார, ஹேரத், ஆகிய குழுவினர். வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள அவரது சகோதரியின் வீட்டில் சோதனையிட்ட போது, அவரது உடைமையில் இருந்தும் மேலதிக கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.
குறிப்பு:>