வயல்களை குட்டைகளாக மாற்றும் மணல் கொள்ளைக்காரர்கள்!
வட தமிழீழம், கிளிநொச்சி ஆனையிறவு தட்டுவன்கொட்டி கிராமத்தில் வயல் நிலங்களில் மணல் அகழப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்க உட்பட்ட கிராமமே தட்டுவன்கொட்டி கிராமம் ஆகும்.
குறித்த பகுதியில் வயல் நிலங்கள் வயல் நிலங்களை அண்டிய பகுதிகளில் தொடர்ச்சியாக மண் அகழ்வு இடம்பெற்று வருகின்றன. இதனால் நாளடைவில் வயல் நிலங்கள் பள்ளங்கள் போல் காட்சி அளிக்க கூடிய நிலை தோன்றியுள்ளதாகக் கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவில் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள ஶ்ரீலங்கா இராணுவத்தினரும் காவல்துறையும் இதைக் கண்டும் காணாது இருப்பதும் அவர்கள் மீதான சந்தேகத்தை வலுவடையச் செய்வதாக செய்திகள் தெரிவிக்கின்ற அதே வேளை ஶ்ரீலங்காவின் விவசாய பிரதி அமைச்சராக வட மாகாணத்தைச் சேர்ந்த அங்கையன் இருப்பதும் குறிப்பிடத் தக்கது.
குறிப்பு:>