தமிழினத்தை அழித்த மகிந்தவுடனான சந்திப்பை மக்கள் பெரிது படுத்த மாட்டார்களாம்!
ஶ்ரீலங்கா, புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மகிந்த ஒத்துழைக்கவேண்டும். நாட்டின் நன்மைக்காக இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாகத் தெரிவித்தேன். இது தொடர்பில் சிந்திப்பதாக அவர் கூறினார். இந்த விவகாரங் களை மகிந்தவுடன் பேசியமைக்காக தமிழ் மக்கள் என்மீது அவநம்பிக்கை கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலையில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
சீனத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது.
‘அரசமைப்பு உருவாக்கத்துக்கு முக்கியத்துவம் வழங்கி, அதன் மூலம் மக்களுக்கான தீர்வை பெற்றுக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கு அனைவரது ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமன்றி இதன் மூலம் தமிழ் மக்களின் நன்மை மட்டுமன்றி, முழு நாட்டின் நமைக்காகவே இதை கேட்கின்றேன். இதை பற்றி தான் சிந்திப்பதாக மகிந்த தெரிவித்தார். இந்தக் கோரிக்கையை அவர் மறுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் என் மீது அவநம்பிக்கை கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை – என்றார்.
குறிப்பு:>