Take a fresh look at your lifestyle.

வீட்டு மண்ணை அள்ளி தன் தலையில் கொட்டும் மாவை

 

கூட்­ட­மைப்­பின் அத்­தி­வா­ரக் கட்­ட­மைப்பு சரி­யாக உள்­ளது. வீட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப நீங்­கள் எங்­க­ளைப் பல­ம­டை­யச் செய்­ய­வேண்­டும். நாங்­கள் ஒற்­று­மை­யா­கப் பல­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். ஒற்­றுமை கொள்கை அடிப்­ப­டை­யி­லேயே இருக்­க­வேண்­டும்.

அத­னை­வி­டுத்து அறிக்­கை­கள் விடு­வ­தும், போலித்­த­ன­மா­கச் செயற்­ப­டு­வ­தும் ஒற்­றுமை அல்ல.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரு­மான மாவை.சோ.சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.

வர­ணி­யில் மக்­கள் குறை­கேள் அலு­வ­ல­கம் நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது. இந்த நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நிரா­க­ரிக்­க­வேண்­டும் என்­றார்.

இங்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் மற்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரும் நிரா­க­ரிக்­க­வேண்­டும் என்­றார்­கள்.

அப்­ப­டி­யா­னால் இரண்டு தரப்­புக்­கும் இடை­யி­லுள்­ளதை மக்­கள் பார்க்­க­வேண்­டும்.
இடைக்­கால அறிக்­கையை வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் நிரா­க­ரித்­தார். கண்­மூ­டித்­த­ன­மாக விமர்­சித்­தார். இது அவ­ரின் போலித்­த­ன­மான அணு­கு­முறை.

எமது தேர்­தல் அறிக்­கை­யில் கூட்­டாட்­சி­யைக் குறிப்­பிட்­ட­மைக்­காக எமக்கு எதி­ராக வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது. அதன் தீர்ப்பு எமக்­குச் சாத­க­மாக வெளி­யா­கி­யது. கூட்­டாட்­சிக்­கு­ரிய விளக்­கம் தெளி­வா­கக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

அதனை விடுத்து இங்­கி­ருந்து வெறு­மனே அறிக்­கை­கள் விட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளால் எது­வும் ஆகப்­போ­வ­தில்லை. இவர்­கள் இந்த வழக்­கில் அமர்ந்­தி­ருந்­தால் நல்ல தீர்ப்பு கிடைத்­தி­ருக்­குமோ தெரி­யாது.

வடக்கு – கிழக்­கில் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீட்க அறிக்கை விட்­டுக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் நீதி­மன்­றில் வாதா­டி­னார்­களா? சிறு முயற்­சி­யா­வது எடுத்­தார்­களா? எங்­கள் கட்­சி­யின் சட்­டத்­த­ர­ணி­க­ளால் பல வழக்­கு­கள் வாதா­டப்­பட்டு அவை வெற்றி பெற்­றும் உள்­ளன.

இந்த விட­யங்­க­ளைக் கூறி நாங்­கள் வாக்­குக் கேட்­க­வில்லை. ஆனால் இப்­போது இவற்­றை­யெல்­லாம் பேச­வேண்­டிய நிலைக்கு எங்­க­ளைத் தள்­ளி­விட்­டார்­கள்.

விசு­வா­சத்­துக்­கும், போலித்­த­ன­மான செயற்­பா­டு­க­ளுக்­கும் இடை­யில் உள்ள வேறு­பா­டு­களை வெளிக்­கொண்­டு­வர வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்­டுள்­ளது.

வெறும் அறிக்­கை­க­ளால் மாத்­தி­ரம் எமது பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்க முடி­யுமா? எங்­கள் இலக்கை அடைய நாம் இரா­ஜ­தந்­திர ரீதி­யில் பல்­வேறு போராட்­டங்­களை நடத்­த­வேண்­டி­யி­ருக்­கின்­றது. அது­தான் இன்­றைய தேவை­யாக இருக்­கின்­றது – என்­றார்.

முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தனது புத்­தக வெளி­யீட்டு விழா­வில், கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான ஒற்­றுமை கொள்கை அடிப்­ப­டை­யி­லேயே அமை­ய­வேண்­டும் என்று கூறி­யி­ருந்த நிலை­யில், அதே கருத்தை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மாவை.சோ.சேனா­தி­ரா­சா­வும் வலி­யு­றுத்­தி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

குறிப்பு:>