Take a fresh look at your lifestyle.

ஒட்டுசுட்டான் வெடிபொருள் சம்பவத்துடன் மேலும் ஏழு பேர் கைது!

வட தமிழீழம் முல்லைத்தீவு ,ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த 22.06.18 அன்று புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தவேளை பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர் குறித்த விசாரணையினை மேற்கொண்டு முற்கட்டமாக 09 பேரை கைதுசெய்து விசாரித்துவந்துள்ளார்கள்
இன்னிலையில் கடந்த மாதம் மேலும் இருவர் கைதாகியும் நீதிமன்றில் ஒருவர் சரணடைந்துள்ள நிலையில் அவர்கள் எதிர்வரும் 17.09.18 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது 12.09.18 அன்று கிளிநொச்சியினை சேர்ந்த மேலும் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு 13.09.18 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள் இவர்கள் குறித்த குற்றவாளிகளுக்கு உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் அனைவரும் கிளிநொச்சி சாந்தபுரத்தினை சேர்ந்தவர்களாவார்கள்.
இன்னிலையில் இவர்களை ஒருஇலட்சரூபாவுடன் மூன்று ஆட்பிணையில் விடுதலை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பு:>