Take a fresh look at your lifestyle.

படையினரை அசெளகரியப்படுத்தக் கூடாது; மைத்திரி கண்டிப்பு

படைவீரர்களை அசெளகரியப்படுத்தக் கூடாது என ஶ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

படைவீரர்களை நெருக்கடிக்குள் ஆμத்தும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட கூடாது என ஜனாதிபதி பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவைப் பொலிஸ் மற்றும் பாதுகாப்புத் தரப்பு முக்கியஸ்தர்களை அழைத்துப் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டுப் படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமையைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்புப் படையினர் மற்றும அதன் பிரதானிகளை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையில் செயற்பாடுகள் இடம் பெறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பு:>