Take a fresh look at your lifestyle.

குளம் புனரமை நிறுத்தியதற்கு நீதி கிடைக்கும் வரை உண்ணாவிரதம் .!

தென் தமிழீழம் மட்டக்களப்பு எல்லை கிராமான கௌலியாமடு பன்சல்கல விகாரை பகுதியில்; புனரமைக்கப்பட்டுவரும்; குளத்தை வனபரிபாலன திணைக்களம் நிறுத்துமாறு அறிவித்ததை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (25) நீதிகிடைக்கும் வரை குளக்கட்டில் உண்ணாவிரம் இருக்கபோவதாக மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரட்ணதேர்  தெரிவித்தார்.
விகாரையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளார் மாநாட்டில் மங்களராம விகாரை விகாராதிபதி சுமணரடணதேர் இவ்வாறு தெரிவித்தார்
குறித்த குளத்தை புனரமைப்பு வேலைகள் 75 வீதம் முடிவடைந்த நிலையில் புனரமைப்பு ஒப்பந்தகாரரிடம் பொலிஸ் இலஞ்சமாக இலச்சக்கணக்கில் கேட்டனர் இதனால் மாதக்கணக்கில் புனரமைப்பு வேலைகளை இடைநிறுத்தியிருந்தேன்
இந்த நிலையில் வேலைகள் ஆரம்பிக்பட்ட நிலையில் வனவரிபாலன திணைக்களம் அதனை நிறுத்துமாறு அறித்துள்ளனர் . இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், கிழக்கு மாகாண சிரேஷ;ட பொலஜஸ் மா அதிபர் அறியப்படுத்தியிருக்கின்றேன். இதற்கு இன்றுவரை நியாயமான பதில் கிடைக்கவில்லை
எனவே நியாயம் கிடைக்கும் வரை செவ்வாய்க்கிழமை தொடக்கம் குளக்கட்டில் உண்ணாவிரதம் இருக்கு தீர்மானித்துள்ளோன். ஏன்றார்