தமிழரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அடையாள உண்ணாவிரதம்!
தமிழரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தை தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் எனப்பலரும் இணைந்து முன்னெடுத்தருந்தனர்.
மேலும் இந்த போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
இந்த போராட்டம் காலை 7 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது:
குறிப்பு:>